சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேச்சுக்கு அவையில் கடும் அமளி எதிர்ப்பு: திமுக வெளிநடப்பு
Published : Jun 23, 2026 02:35:53 PM - 4 months ago
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் விஜய், திமுக ஆட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார் ,இதற்கு அவையில் கடும் அமளி ஏற்பட்டது. திமுக உறுப்பினர்கள் முதல்வர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
அப்போது அவையில் திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடும் அமளியில் ஈடுபட்டனர். பதிலுக்கு தவெக உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டனர்
அப்போது, பேசிய சபாநாயகர், “முதல்வர் பேசி முடித்தவுடன், உங்களுக்கு அவகாசம் தருகிறேன், எதிர்க்கட்சித் தலைவர் பேச வாய்ப்பு தருகிறேன்” என திமுகவினரிடம் தெரிவித்தார். ஆனாலும், அமளி தொடர்ந்து அதிகமானது. அதன் பின்னர் அவைத் தலைவர் அமைச்சர் செங்கோட்டையன், அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோர் பேசினர்.
அதன்பின்னரும், திமுகவினர் அமளியில் ஈடுபட்டதால், “ எதிர்க்கட்சித் தலைவர், உங்கள் கட்சி உறுப்பினர்களை அமைதிப் படுத்த வேண்டும்” என்று சபாநாயகர் கேட்டுக்கொண்டார். அதன் பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் திமுகவுக்கு பதில் அளித்தனர்
பின்னர் பேசிய முதல்வர் விஜய், “சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் எதிர்க்கட்சிகள் அக்கறையோடு கேட்பதாக தெரியவில்லை.
போதைப்பொருள் நடமாட்டத்தை தொடக்கத்திலேயே யார் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். காவல் துறையை கையில் வைத்திருந்தவர்கள் ஏன் கட்டுப்படுத்தவில்லை.
நம் ஆட்சிக்கு நிர்வாகத் திறன் இல்லை என சொல்கிறார்கள். ஊர் அடிச்சு உலையில் போட்டு, ஊழல் மேல் ஊழல் செய்து, அதிலிருந்து தப்பிப்பதற்கு பெயர்தான் நிர்வாகத் திறன் என்றால், அதுபோன்ற நிர்வாகத்திறனை நம் அரசு ஒரு போதும் செய்யாது. ,
என்று முதல்வர் கூறினார்
இதனையடுத்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “நான் நேற்று பேசும்போது சில அமைச்சர்கள் குறுக்கிட்டு பேசினர். அதற்கு நீங்கள் அனுமதி கொடுத்தீர்கள். அதுபோல இன்று முதல்வர் பேசும் போது சில தவறான வார்த்தைகளை சொல்லியுள்ளார். கட்சி நிதி என சொல்லியுள்ளார். தைரியம் இருந்தால் எந்தக் கட்சி நிதி என சொல்லுங்கள். ஆதாரத்தோடு சொன்னால் எதையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேற்று அவை முடிந்த வீட்டுக்கு சென்ற பின்னர் மரபை மீறி ஒரு அமைச்சர் நேரலையில் சட்டமன்றத்தில் பேசி கொண்டு இருக்கிறரர் என்று கூறினார் உதயநிதி ஸ்டாலின் பிறகு சபாநாயகர் ஆய்வு செய்து முடிவு எடுப்பேன் என்று கூறினார் .
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், “முதல்வரின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லையென்றால் ஆய்வு செய்து நீக்கப்படும்” என்றார்.
பின்னர் பேசிய முதல்வர் விஜய் டாஸ்மாக் பொலவே பல துறைகளிலும் கட்சி நிதி என்ற பேரில் அடிச்ச கொல்லை கஜானா கொள்ளைய கொஞ்சம் கொஞ்சமாக கஜானா உள்ளயே போய் சேர்த்து கொண்டு இருக்கிறார்கள் நாங்க ஊழல் செய்யமாட்டோம் தொட்டவங்களை விடமாட்டோம் என்றார்
அப்போது முதல்வரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
அவங்க தயவுல தான் ஆட்சி நடக்கிறது சொல்ராங்க மக்கள் தயவுல தான் இந்த ஆட்சி நடக்கிறது என்றார் அனுப்பிவைத்தவங்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்து இருக்கிறோம் ஆட்சி அமைக்க ஒத்துழைப்பு கொடுத்த மார்க்க சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய மார்க்க சிஸ்ட் கம்யூனிஸ்ட்சுயேட்சியா கொடுத்தோம் என்று சொல்கின்றனர் மற்றும் பட்டியல் இனத்தவர் 8 சகோதரர்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்து இருகோரோம் 4 சகோதரிகளுக்கு அமைச்சர் பதவி கொடுத்து இருக்கிறோம்
நிதி நிலைமை மோசமாக இருக்கு அதனால் கொஞ்சம் அவகாசம் கேட்டேன் சரி பார்த்த பிறகு நன் கொடுத்த வாக்குறுதிகள் செயல்படுதுவேன் என்றார்
முதல்வர் விஜய் உரை முடிந்தவுடன் சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
