சட்டசபையில் எதிர் கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்து பேசியுள்ளார்.
Published : Jun 22, 2026 03:38:33 PM - a month ago
தமிழ்த்தாய் வாழ்த்தைவிட ஆளுநர் முக்கியம் என்று நினைக்கிறதா த.வெ.க. அரசு?
நான் முதல்வன் திட்டத்தை கைவிடுவது ஏன்?
ஸ்ரீவைகுண்டம் பாலியல் புகார்: எம்.எல்.ஏ. சரவணன் மீது எடுத்த நடவடிக்கை என்ன?
பெரம்பூர் தொகுதி மின்வெட்டில் நம்பர் 1
பள்ளிகளில் குத்து பாடல்களை நிறுத்துங்க: உதயநிதி ஸ்டாலின் காட்டம்
சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றினோம்.
தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு - அறிவிக்கப்படாத மின்வெட்டு - பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் - விவசாயிகள் பிரச்சினை போன்றவற்றிற்கு எந்த தீர்வும் ஆளுநர் உரையில் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி பேசினோம்.
சட்டசபையில் எதிர் கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் காட்டமான பல கேள்விகளை விமர்சித்து பேசியுள்ளார்.
திரைப்படத்தில்தான் ஒரே மாதத்தில் பணக்காரர் ஆக முடியும் - உதயநிதி
திரைப்படத்தில்தான் ஐந்து நிமிடத்தில் ஏழையாக இருப்பவன் பணக்காரன் ஆகிவிடலாம். ஆனால் நிஜத்தில் ஒரே மாதத்தில் பணக்காரர் ஆகிவிட முடியாது. எனவே முதலமைச்சர் சொன்ன சாதனை எல்லாம் யாருடைய ஆட்சியில் வந்தது என்று மக்கள் பார்த்துக்கொண்டு உள்ளார்கள் என உதயநிதி ஸ்டாலின் சட்டசபையில் விமர்சித்து பேசியுள்ளார்.
தமிழ்த்தாய் வாழ்த்தைவிட ஆளுநர் முக்கியம் என்று நினைக்கிறதா த.வெ.க. அரசு? உதயநிதி ஸ்டாலின் கேள்வி
தமிழ்த்தாய் வாழ்த்தைவிட ஆளுநர் முக்கியம் என்று நினைக்கிறதா தவெக அரசு? சட்டப்பேரவையின் அதிகாரத்தை ஆளுநரிடம் கொடுக்கும் அளவுக்கு என்ன காம்பிரமைஸ் நடந்துச்சு?
ஆளுநர் உரையின்போது இருமுறை தேசிய கீதம் இசைக்கப்பட்டது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
நான் முதல்வன் திட்டத்தை கைவிடுவது ஏன்? உதயநிதி ஸ்டாலின்
நான் முதல்வன் திட்டத்தால் 41 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். இத்திட்டத்தை முடக்க முயற்சி நடக்கிறது திட்டத்தை கைவிடுவது ஏன் என்று முதலமைச்சர் விஜய் பதில் சொல்ல வேண்டும். -உதயநிதி ஸ்டாலின்
பெரம்பூர் தொகுதி மின்வெட்டில் நம்பர் 1- உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாட்டிப் பெரம்பூர் தொகுதியை மின்வெட்டில் நம்பர் 1 ஆக மாற்றியுள்ளார் முதலமைச்சர் விஜய். அண்ணன் கையில் பவர் வந்தால் தமிழ்நாடு மாறும் என நினைத்தோம்.. ஆனால் தமிழ்நாட்டுக்கே பவர் போயிடுச்சுன்னு த.வெ.க.வினர் பேசுகின்றனர். -உதயநிதி ஸ்டாலின்
பனையூர்லயே பவர் இல்ல: உதயநிதி ஸ்டாலின்
முன்பெல்லாம் புயல் மழைக்குத்தான் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவார்கள். ஆனால் இந்த ஆட்சியில்தான் கரண்ட் இல்லை என்று லீவு விடுகிறார்கள்.
த.வெ.க. ஆஃபிஸ்லயே பவர் கட் ஆகிருக்கு. ஆளுங்கட்சியா இருந்தும் பனையூர்லயே பவர் இல்லையே என அங்கு வந்தவர்கள் புலம்பிடு போனதா தகவல் வந்துச்சு
-உதயநிதி ஸ்டாலின்
ஸ்ரீவைகுண்டம் பாலியல் புகார்: எம்.எல்.ஏ. சரவணன் மீது எடுத்த நடவடிக்கை என்ன? உதயநிதி
பாலியல் புகாரில் ஸ்ரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ. சரவணன் மீது எடுத்த நடவடிக்கை என்ன? இந்த ஆட்சியின் முன்பு பல பிரச்னைகள் உள்ளன. அதில் கவனம் செலுத்தாமல், அடுத்த கட்சியில் இருந்து ஆட்களை இழுப்பதில்தான் முழு முயற்சி நடக்கிறது.
ஆள் பிடிக்கும் வேலையை விட்டுவிட்டு, ஆட்சி நிர்வாகத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும்
-சட்டப்பேரவையில் உதயநிதி கேள்வி
பள்ளிகளில் குத்து பாடல்களை நிறுத்துங்க: உதயநிதி ஸ்டாலின் காட்டம்
அரசு பள்ளிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வது தவறில்லை. ஆனால், மாணவர்கள் மத்தியில் தவறான பாடல்களை போட்டு நடனமாட வைக்கிறார்கள். மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் பாடல்களை போட்டால் பரவாயில்லை. சினிமாவில் உள்ள குத்து பாடல்கள், தவறான அர்த்தமுள்ள பாடல்களை மாணவர்கள் மத்தியில் ஒளிபரப்பு செய்கிறார்கள். முதல்வர் தலையிட்டு இதை நிறுத்த வேண்டும்
-உதயநிதி ஸ்டாலின்
