News
மேகதாது விவகாரம் குறித்து இனி பேச அனுமதி இல்லை - சபாநாயகர்
Published : Jun 22, 2026 02:42:22 PM - a month ago
மேகதாது விவகாரம் குறித்து இனி பேச அனுமதி இல்லை - சபாநாயகர்!
மேகதாது தொடர்பான தனித் தீர்மானம் ஏற்கனவே பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதால், அதுகுறித்து இனி விவாதத்திற்கு இடமில்லை என சபாநாயகர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பேசியபோது எதிர்ப்பு தெரிவிக்காமல், பின்னர் பிரச்சினை எழுப்புவது என் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
