மன நலத்திலிருந்து உடல் நலத்திற்கான பாதையை யோகா காட்டுகிறது: சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் மோடி
Published : Jun 21, 2026 02:43:49 PM - 4 months ago
கொல்கத்தா: யோகாவை அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாற்றுவோம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
‘சர்வதேச யோகா தினம்’ இந்த ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி கொல்கத்தாவில் நடைபெற்ற யோகா தின விழாவில் கலந்து கொண்டார். மற்றும் மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் சுவேந்து அதிகாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “அனைவருக்கும் சர்வதேச யோகா தின வாழ்த்துகள். ஜூன் 21, உலகின் மிகப்பெரிய கூட்டுக் கொண்டாட்டங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.
யோகா என்பது வெறும் ஓர் உடற்பயிற்சி மட்டுமல்ல. அது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் உயிர்சக்தி, நல்வாழ்வு ஆகியவற்றை மேம்படுத்துகிறது.
நமக்கு வயதாகும்போது ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் ஆற்றலுடனும் இருக்க யோகா உதவுகிறது. ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கிறது. யோகா தனிப்பட்ட நல்வாழ்க்கு மட்டுமல்ல; அது உலக அமைதிக்கான ஒரு பாதையும்கூட. இந்த பயிற்சி சுய விழிப்புணர்வை ஊக்குவிக்கிறது, மன அழுத்தத்தைக் குறைக்கிறது. யோகாவை ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் கடைப்பிடிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாற்றுவோம்” என கேட்டுக்கொண்டார்.
