News
பணிமனையில் சீரமைப்புப் பணிகள் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும்
Published : Jun 21, 2026 01:24:49 PM - a month ago
சென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் வரும் 28- ஆம் தேதி வரை தற்காலிகமாக நின்று செல்லவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அரக்கோணம் ரயில்வே பணிமனையில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து ரயில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதிகளைக் கருத்தில் கொண்டு தற்காலிகமாக குறிப்பிட்ட விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும்.
