News
,த.வெ.கவில் இணையும் கட்சியினருக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கப்படும். அமைச்சர் ஆதவ் அர்ஜூனா
Published : Jun 20, 2026 09:22:52 PM - 3 months ago
சென்னை அடுத்த பனையூரில் தமிழக வெற்றி கழகத்தின் தலைமை அலுவலகத்தில், மாற்று கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் தங்களை இக்கட்சியில் இணைத்துக் கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, த.வெ.கவில் இணையும் கட்சியினருக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கப்படும். அ.தி.முக வழிமாறி செல்லும்போது முதல் ஆளாக குரல் கொடுத்தவர் நமது தவெக அமைச்சர் செங்கோட்டையன். 50 ஆண்டுகுள் பழமைவாதி செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கியது அக்கட்சி தலைமையின் தவறு. அ.தி.மு.கவும், தி.முக.வும் ஒன்று சேர்ந்ததால்தான் அ.தி.மு.க.வினர் த.வெ.க.வில் இணைகின்றனர் என்றார்
