டேப்ஸ்’ ஓய்வூதிய திட்ட இறுதி விதிமுறைகள் வெளியிடப்படும் 30% இடைக்கால நிவாரணம் அறிவித்தார்,முதல்வர் விஜய்
Published : Jun 19, 2026 10:15:31 AM - a month ago
டேப்ஸ்’ ஓய்வூதிய திட்ட இறுதி விதிமுறைகள் வெளியிடப்படும் 30% இடைக்கால நிவாரணம் அறிவித்தார்,முதல்வர் விஜய்
டேப்ஸ்’ ஓய்வூதிய திட்ட இறுதி விதிமுறைகள் வெளியிடப்படும் வரை, கடந்த ஜனவரி 1-ம் தேதிக்குப் பிறகு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களுக்கு மட்டும் அடிப்படை சம்பளத்தில் 30 சதவீதம் அல்லது ரூ.10 ஆயிரம் - இதில் எது அதிகமோ அத்தொகை இடைக்கால நிவாரணமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
‘டேப்ஸ்’ ஓய்வூதிய திட்டத்தின் இறுதி விதிகள் மற்றும் கணக்கீட்டு நடைமுறைகள் உருவாக்கப்பட்டுவரும் நிலையில், இடைப்பட்ட காலத்தில் ஓய்வுபெறும் ஊழியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் இடைக்கால நிவாரணத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக நிதித்துறை செயலர் எம்.ஏ.சித்திக் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: ‘டேப்ஸ்’ ஓய்வூதியத் திட்டத்தின் இறுதி விதிகள் அறிவிக்கப்பட்டு, ஒவ்வொரு ஊழியருக்கும் அவர்கள் கடைசியாகப் பெற்ற அடிப்படைச் சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக நிர்ணயிக்கும் பணிக்கு காலஅவகாசம் தேவைப்படும். எனவே, 1.1.2026-க்குப் பிறகு ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு இடைக்கால வாழ்வாதார ஆதரவுத்தொகை வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.
