News
ஆளுநரும், பாஜகவும், திமுகவும் தான் மிக நெருக்கமான உறவு உள்ளது. -அமைச்சர் நிர்மல் குமார்
Published : Jun 18, 2026 05:40:17 PM - a month ago
சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார்
அமலாக்கத் துறை சார்பில் செந்தில் பாலாஜி உள்ளிட்ட சிலர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டிருந்தார்கள், அந்த கோப்புகள் கடந்த வாரம் கையெழுத்தானது. ஆனால், ஆளுநர் அதற்கு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. அப்படியானால் யார் யாருடன் இணக்கமாக இருக்கிறார்கள்? ஆளுநரும், பாஜகவும், திமுகவும் ஒன்றாக இருக்கிறார்கள்” என அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜகவிவிடம் மறைமுகமாக திமுக இருக்கிறது. திமுகவை பின்னாலிருந்து இயக்குவதே பாஜகதான். செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான கோப்புகள் மீது ஆளுநர் கையெழுத்து போடாதது ஏன்?. இதற்கு பாஜகவும், திமுகவும் பதில் சொல்ல வேண்டும்.
