News
தவெக அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையே ஆளுநர் உரை - அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ்
Published : Jun 18, 2026 05:13:19 PM - 2 months ago
தவெக அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையே ஆளுநர் உரையாக அமைந்துள்ளது - அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ்
ஆளுநர் உரையில் எதிர்பார்த்த அளவிற்கு திட்டங்களோ, அறிவிப்புகளோ இல்லை.
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
போதை பொருள் நடமாட்டம் முன்பை விட அதிகமாக உள்ளது; 38 நாட்களில் 107 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் நேரத்தில் கவர்ச்சிகரமாக பேசி வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாங்கம் தான் தவெக.
