News
கருப்பு பேட்ஜ் அணிந்து பதாதைகளை ஏந்தி தி.மு.க எம்.எல்.ஏக்கள் வருகை
Published : Jun 18, 2026 12:13:57 PM - a month ago
கருப்பு பேட்ஜ் அணிந்து பதாதைகளை ஏந்தி தி.மு.க எம்.எல்.ஏக்கள் வருகை
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்நிலையில் சட்டமன்றத்திற்கு திமுக எம்.எல்.ஏக்கள் வரும் போது அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர். தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதை சுட்டிக் காட்டும் வகையில் இப்படி செய்திருக்கின்றனர். அதில் ”வாயை திறங்க CM” என்ற வார்த்தைகள் இடம்பெற்றிருக்கின்றன.
▪️ வாயைத் திறங்க CM
▪️ கதறல் கேட்குதா CM?
▪️ சிறு பெண்கள் இங்கே! சிங்கப் பெண்கள் எங்கே?
▪️ ரீல்ஸ் இங்கே.. ரியல் எங்கே?
▪️ மாஸ்டர் வாயில் பிளாஸ்டர்..
▪️ திரையில் நாயகன்.. தரையில் வில்லன்
▪️ திரையில் HERO இல்ல.. தரையில் ZERO
▪️ தற்குறி ஆட்சி தமிழ்நாடே சாட்சி
▪️ தூய சக்தி அல்ல துயர சக்தி
உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி திமுக உறுப்பினர்கள் போராட்டம்
