News
‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயர் 'TN Skill Corporation' என தவெக.அரசு மாற்றம்
Published : Jun 17, 2026 02:15:20 PM - 4 months ago
‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயர் 'TN Skill Corporation'
என மாற்றம்
முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் கனவுத் திட்டமாக முன்னெடுக்கப்பட்ட 'நான் முதல்வன்' என்ற பெயர், தற்போது அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
‘நான் முதல்வன்’ திட்டத்தின் அதிகாரப்பூர்வ X கணக்கில் அத்திட்டத்தின் பெயர் 'TN Skill Corporation' என மாற்றம்
நான் முதல்வன் திட்டம் தொடர்பான பழைய பதிவுகள், வீடியோக்களும் நீக்கம்
மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்காக தொடங்கப்பட்டு, மாணவர்களிடையே அதிக விழிப்புணர்வு செய்யப்பட்ட திட்டம் 'நான் முதல்வன்'. இந்த திட்டத்தில் தற்போது அதிரடியான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, இத்திட்டத்தின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் பக்கங்களில் பழைய அடையாளங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது.
