News
தமிழகத்தின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியீடு அமைச்சர் மரிய வில்சன்
Published : Jun 16, 2026 08:05:06 PM - a month ago
- தமிழகத்தின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியீடு அமைச்சர் மரிய வில்சன்
- மொத்த கடன் பொறுப்பு ரூ.13.18 லட்சம் கோடி: அரசின் வெள்ளை அறிக்கை அம்சங்கள்
- வட்டி செலவினத்தால் தமிழ்நாட்டில் மூலதனச் செலவு குறைந்து கொண்டே வருகிறது..
- கர்நாடகா, மராட்டியம், குஜராத்தை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டின் மொத்த கடன் சதவீதம் அதிகம்..
- கடந்த 5 வருடங்களில் வட்டி செலவு 61 சதவீதமாக உயர்ந்துள்ளது..
- 60 வருடங்களில் வாங்கிய கடனை விட திமுக ஆட்சியில் 5 வருடங்களில் அதிக கடன்..
- சொந்த வரி வருவாயில் 3ல் ஒரு ரூபாய் கடனுக்கான வட்டிக்கே செல்கிறது..
- வட்டி மட்டும் ஆண்டுக்கு ரூ.67,000 கோடி செலுத்தப்படுகிறது..
- நிதியமைச்சர் மரிய வில்சன்
- உள்நாட்டு உற்பத்தி குறைவு
- மாநில உள்நாட்டு உற்பத்தி -2.2 சதவீதமாக குறைந்துள்ளது; குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிராவை விட தமிழகத்தின் உள்நாட்டு உற்பத்தி குறைவு
- முதலீடு செய்வதற்கு இல்லாமல் அன்றாட தேவைகளுக்கே கடன் வாங்கியுள்ளது திமுக - நிதியமைச்சர் மரிய வில்சன்
- மகளிர் உரிமை திட்டம், பயிர்கடன் தள்ளுபடி,
- இலவச மகளிர் பேருந்து திட்டங்கள் குறித்து
- நிதி அமைச்சர் மரிய வில்சன் விமர்சனம்
- "வருவாய் பற்றாக்குறை கோவிட் காலத்தை விட கடும் உச்சம். முந்தைய அரசு முதலீட்டுக்கு அல்லாமல் அன்றாட செலவுக்கு கடன் வாங்கியுள்ளது. அரசு, வட்டி மட்டும் ஆண்டுக்கு ரூ.67,000 கோடி செலுத்துகிறது. கனிம வளத்துறையில் நடந்த ஊழல், வருவாய் இழப்புக்கு முக்கிய காரணம்"
- "வட்டி, சம்பளம், ஓய்வூதியத்திற்காக மொத்த நிதியில் 64% செலவு. தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை ரூ.78,324 கோடி. மாநிலத்தின் திட்டங்களுக்கு 13% மட்டுமே செலவு செய்யப்படுகிறது
- மின்வாரிய குழுமத்திற்கு ரூ.2,47,130 கோடி கடன். போக்குவரத்து கழகத்திற்கு மொத்த இழப்பு ரூ.72,667 கோடி"
- - அமைச்சர் மரிய வில்சன்
- தமிழகத்தின் கடன் அதிகரிக்க 4 முக்கிய காரணங்கள்
- மாநிலத்தின் சொந்த வரி வருவாய் குறைந்துள்ளது கடன் அதிகரிக்க முக்கிய காரணம்
- வட்டி செலுத்துதல் ,பொறுப்பற்ற செலவீனம் மூலதன செலவீனம் கடன் அதிகரிக்க 4 கரணம் ஆகும்
- தமிழகத்தின் நிதி நிலை சீராக 6 அம்சம்
- ஊழலற்ற நிர்வாகம் மூலம் வருவாய் இழப்பு சரி செய்தல் , அரசின் கொள்முதல் செலவு குறைதல் பொதுத்துறை நிறுவன சீர் திருத்தும் -கட்டமைப்பு சார்ந்தது மானியமல்ல
- - அமைச்சர் மரிய வில்சன்
- "மாநில போக்குவரத்து கழகங்களின் மூலம் இயக்கப்படும் ஒவ்வொரு வாகனத்தையும் ஒரு கிலோமீட்டர் இயக்குவதற்கான செலவு ரூ.78.81 ஆக உள்ளது. ஆனால், வருவாய் ஒரு கிலோமீட்டருக்கு ரூ.25.97 ஆக உள்ளது. ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் நஷ்டம் மட்டும் ரூ.52.84"
- * அமைச்சர் மரிய வில்சன் தமிழ்நாட்டில் ஓவ்வொரு தனி நபர் மீதும் ரூ 1,28.934 கடன் உள்ளது
