News
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.8ஆக பதிவு
Published : Jun 16, 2026 02:19:37 PM - 2 months ago
இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இன்று அதிகாலை இந்திய நேரப்படி 8.57 மணிக்கு 6.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி காலை 11:27 மணிக்கு ஏற்பட்டது. எனவும் இதன் மையப்பகுதி மத்திய சுலவேசி மாகாணத்தின் தலைநகரான பலுவிற்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 46 கிலோமீட்டர் (28.5 மைல்) தொலைவில் அமைந்திருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதங்கள் மற்றும் பொருள்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
