News
17-வது சட்டமன்றப் பேரவையின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சியை முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள்குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார்கள்
Published : Jun 16, 2026 01:30:44 PM - 2 months ago
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (16.6.2026) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் திரு. ஜே.சி.டி. பிரபாகர் அவர்கள் முன்னிலையில் 17-வது சட்டமன்றப் பேரவையின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சியை குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில், அவை முன்னவரும், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சருமான திரு. கே.ஏ. செங்கோட்டையன், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாண்புமிகு சட்டப்பேரவை துணைத் தலைவர் திரு. எம். ரவிசங்கர், மாண்புமிகு அரசு தலைமைக் கொறடா திரு. ஆர். சபரிநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவைச் செயலாளர் திருமதி இரா. சாந்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
