News
செங்கை குடும்ப நல நீதிமன்றத் முதல்வர் விஜய் - சங்கீதா ஆன்லைனில் ஆஜராக நீதிமன்றம் அனுமதி
Published : Jun 16, 2026 11:26:30 AM - 2 months ago
- முதல்வர் விஜய் - அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து வழக்கு நேற்று மீண்டும் செங்கை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்து, வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதி வழங்க வேண்டும் என விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு அனுமதி வழங்கியது.
தனது சார்பில் ஆஜராகும் வழக்கறிஞருக்கு அதிகாரம் வழங்கியிருப்பதை விஜய் ஆன்லைன் வாயிலாக நீதிமன்றத்தில் தோன்றி உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை ஆக. 7-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
