நல்லகண்ணுவுக்கு மணிமண்டபம் அமைக்க - அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற கூட்டத்தில் தீர்மானம்
Published : Jun 15, 2026 10:25:31 AM - 5 hours ago
சென்னை: தி.நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில்
அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநிலக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.
மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், இரா.முத்தரசன், கே.பாரதி, இரா.தமிழ்ப்பெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மறைந்த மூத்த தலைவர் நல்லகண்ணுவின் போராட்ட வரலாற்றையும், தியாகத்தையும் எடுத்துச் சொல்லும்விதமாக சென்னையில் அவருக்கு தமிழக அரசு மணிமண்டபம் அமைக்க வேண்டும்.
கர்நாடக அரசு மேகேதாட்டு அணை திட்டத்தை முற்றிலுமாக கைவிட ,
பாலியல் வன்கொடுமை, போதை கலாச்சாரம், ஊழல் இல்லாத, சாதி மதவெறியற்ற தமிழகத்தை உருவாக்குவோம் என்ற வகையில் 1 கோடி பேர் கையெழுத்திடும் இயக்கம் ஜூலை 5 முதல் 25-ம் தேதி வரை 5 ஆயிரம் இடங்களில் நடத்தவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
