மீன்பிடித் தடைக்காலம் நிறைவு: 2 மாதம் பிறகு உற்சாகத்துடன் கடலுக்குச் சென்ற மீனவர்கள்
Published : Jun 15, 2026 09:56:38 AM - 5 months ago
தமிழகத்தின் கிழக்குக் கடற்கரை பகுதிகளில் 2 மாத கால மீன்பிடித் தடைக்காலம் நிறை வடைந்தது மீனவர்கள் கடலுக்கு உற்சாகமாக கிளம்பிச் சென்றனர்.
தமிழ்நாட்டில் 2 மாத மீன்பிடித் தடைக்காலம் முடிந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள். டீசல் விலை உயர்வால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு கோடை காலத்தில் இரண்டு மாதங்கள் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்ல மத்திய, மாநில அரசுகள் தடை விதிக்கும். 2026 ஏப்ரல் 15-ல் துவங்கி ஜூன் 14 வரையிலும் 61 நாட்கள் தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடை விதிக்கப்பட்டது. தடைக் காலத்தில் மீனவர்கள் தங்கள் படகுகள், வலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். தொழில் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக மீன் வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், மீன்களின் விலையும் கணிசமாக உயர்ந்தது.
மீன்பிடி தடைக்காலம் வெள்ளிக்கிழமை இரவுடன் நிறைவடையும் நிலையில்,
14 மாவட்டங்களைச் சேர்ந்த 15,000க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.
கடந்த இரண்டு மாதங்களாக வருமானமிற்றி தவித்து வந்த மீனவர்கள் மீன்பிடித் தடைக்காலத்தில் அதிக மீன்கள் உற்பத்தியாகி இருக்கும் என்பதால் அதிகளவில் மீன்பாடும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கடலுக்குச் செல்கிறார்கள்.
