தமாகா , தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக- ஜி.கே.வாசன்
Published : Jun 15, 2026 09:43:52 AM - 5 months ago
தமாகா ஆலோசனை கூட்டம், கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் எழும்பூரில் நேற்று நடைபெற்றது. அதில் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் 5 இடங்களில் தாமரை சின்னத்தில் போட்டியிட்ட தமாகா அனைத்திலும் தோல்வியை தழுவியது.
இந்த கூட்டத்தில் அடுத்து வருவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட ரீதியாக வெற்றி பெற என்ன தேவை? என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து கட்சியின் நிர்வாக அமைப்பை சீரமைக்க ஜி.கே.வாசனுக்கு முழு அதிகாரம், தேர்தல் முடிந்த நிலையில் தமாகா தனி நிலைப்பாட்டில் பயணித்தல் உட்பட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தேர்தல் தோல்வி மற்றும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தமாகாவின் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்களுடனான
மாநில துணை தலைவர்கள் விடியல் சேகர், முனவர் பாஷா, சக்தி வடிவேல், பொருளாளர் ராமன், மாநில நிர்வாகிகள் வெங்கடேசன், ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழகத்தில் 60 ஆண்டுகளுக்கு பின்பு அரசியலில் யாரும் எதிர்பாராத வகையில் புதிய ஆட்சி மலர்ந்திருக்கிறது.
.ஆனால் 2014 முதல் 2026 வரை தொடர்ந்து 12 ஆண்டுகளில் குறிப்பாக கடந்த 3, 4 தேர்தல்களில் எங்களது கூட்டணியும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
அதனடிப்படையில் மத்தியில் பாஜக, மாநிலத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தமாகா நட்பு கட்சியாகவே விலகுகிறது
