சிறுவர்களை பாதிக்கும் செல்போன்
காலை முதல் இரவு தூங்கும் வரை மொபைல் போன்தான் இன்று அனைவரின் பொழுதுபோக்கு சாதனமாக விளங்குகிறது . இந்த செல்போன்கள் மனிதர்களின், குழந்தைகளின் விடை பிரியா ஒட்டுண்ணியாக இருக்கிறது . இந்த செல்போன் நண்பர்கள் ,,பொழுது போக்கு விளையாட்டு ,என அனைத்தயும் மனிதர்கள் மத்தியில் இருந்து மறந்து மிக தொலைவில் கொண்டு செல்கிறது
கண்கள் சிமிட்டாமல் நீண்ட நேரம் செல்போன் பார்த்துக்கொண்டிருப்பதால் செல்போன் திரையில் இருந்து வரும் வெளிச்சம் [ஒளி,] மெலடோனின் ஹார்மோனை தடுக்கும். மனநல பாதிப்புக்கும் மிகப்பெரிய அளவில் கண்களை பாதிப்பது அல்லாமல் பேச்சு குறைபாடு, பார்வை குறைபாடு, கேள்வி திறன் குறைபாடு, கற்றல் குறைபாடு என குழந்தைகளின் எதிர்காலமும் வரும் காலங்களில் பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் இன்றும் மருத்துவ மனைகளை நோக்கி வந்து கொண்டு இருக்கிறாரகள்
தொடர்ச்சியாக பல மணி நேரம் செல்போன் பார்க்கும்போது நபருக்கு எந்த வகையான உடல் ரீதியான மன ரீதியான தாகத்திற்கு ஆளாகுகிறாரகள் அதிகமாக நேரம் மொபைல் ஸ்க்ரீனை பார்ப்பதால் அறிவாற்றல் குறையும் எனவும் , இளம் வயதில் அனைத்தையும் வேகமாக உள்வாங்கும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறைவதாகவும் சொல்லப்படுகிறது.மனநிலை மாற்றம் ஏற்பட்டு மன அழுத்தத்திற்கு உள்ளாகும் வாய்ப்புள்ளது. என சில ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
இன்றயை பல இளைய தலைமுறையினர் தூக்கமின்மை நோயால் அவதி படுவது மட்டும் அல்லாமல் . பசி, படிப்பு,விளையாட்டு நட்பு போன்ற முக்கிய விஷயங்களை மறந்து செல்போனே கதி என கிடைக்கும் சூழல் உருவாகிவிட்டது
குழந்தைகள் அடம்பிடித்தால் ஒரு சில பெற்றோர்கள் அவர்களை அமைதிப்படுத்த செல்போனை காண்பிக்கின்றனர்.
இதனால் கண்களின் படலம் பாதிக்கப்படும். சிறுவயதிலேயே பார்வை குறையும் தன்மை பேசாமல் பேச்சுத் திறன் குறையும் தன்மை ஏற்படும் பின்விளைவுகள் குறித்து பலருக்கும் தெரியாத நிலையில், குழந்தைகள் மொபைல் ஃபோனை பார்த்து சாப்பிடும் பழக்கத்தையும் கையில் எடுத்துவிட்டனர். இது செரிமான செயல்பாட்டை பாதிக்கும். ஊட்டச்சத்து பிரச்சனையையும் உண்டாக்கும்.
