News
அஇஅதிமுக அடிப்படை உறுப்பினர் பதவி யில் என்னை விடுவித்துக் கொள்கிறேன் -திருமதி கௌதமி
Published : Jun 14, 2026 01:04:17 PM - 5 months ago
கழக அடிப்படை உறுப்பினர் மற்றும் கழகக் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியில் இருந்து இன்று முதல் என்னை விடுவித்துக் கொள்கிறேன்.
இன்று 14/06/2026 முதல் நான் வகித்து வரும் அஇஅதிமுக அடிப்படை உறுப்பினர் பதவி மற்றும் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியில் இருந்தும் தற்போது உள்ள அரசியல் சூழல் கருத்தில் கொண்டு. நான் சமூக சேவை செய்ய ஏதுவான வகையில் கனத்த இதயத்துடன் என்னை விடுவித்துக் கொள்கிறேன். ஒத்துழைப்பு நல்கிய முன்னாள் அமைச்சர் பெருமக்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் அனைவருக்கும் மனதார வணங்கி நன்றி கூறி என்னை கழகத்திலிருந்து விடுவித்துக் கொள்கிறேன்.
