News
சமூக வலைதளங்களில் இன்ஸ்டா ரீல்ஸ் மூலம் தவெக அரசின் தவறுகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்” அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி
Published : Jun 14, 2026 12:05:25 AM - 2 months ago
இன்ஸ்டா ரீல்ஸ் மூலம் தவெக அரசின் தவறுகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்” என கட்சியின் மாவட்ட நிர்வாகிகளுக்கு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தினார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதையடுத்து தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராயவும், கட்சிப் பணிகளை தீவிரப்படுத்தவும், ஒவ்வொரு மாவட்டத்தைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளை அழைத்துப் பேசி ஆலோசனைகளையும், கருத்துகளையும் பெற அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி முடிவு செய்திருந்தார்.
அதன்படி, முதல் நாளான இன்று காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம், ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் தோல்விக்கான காரணம் குறித்து கட்சி நிர்வாகிகளிடம் தனித்தனியே 3 மணி நேரம் பழனிசாமி கேட்டறிந்தார்.
சமூக வலைதளங்களை சரிவர கையாளாததே தோல்விக்கு காரணம். அதிமுக சார்பில் வார் ரூமை தனியாக உருவாக்க வேண்டும்”. இனி நாமும் வெல்வோம். இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலமாக அரசின் தவறுகளை உடனுக்குடன் பொதுமக்களிடம் கொண்டுசேர்க்க வேண்டும். தவெகவின் வெற்றி நிலையானதல்ல. தவெக நமக்கு எதிரியே இல்லை. திமுகதான் நமக்கு உண்மையான எதிரி. அடுத்து எப்போது தேர்தல் வந்தாலும் நாம் வெல்வோம்” என்று பழனிசாமி கூறினார்
