News
மின்தடை ஏற்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் சீரமைக்கப்பட்டது- மின்வாரியம்
Published : Jun 13, 2026 12:00:15 PM - 5 months ago
பெரும்பாலான இடங்களில் மின்தடை ஏற்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் சீரமைக்கப்பட்டது. அனைத்து இடங்களிலும் மீண்டும் மின் விநியோகம் வழங்கப்பட்டது. மின்மாற்றி பிரச்சினை, புதைவட பாதிப்பால் மின்தடை ஏற்பட்டது. கடந்த
24 மணி நேரத்தில் 21 இடங்களில் மின்தடை ஏற்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் தொடர் பணியில் ஈடுபட்டு விநியோகத்தை சீரமைத்தனர். தஞ்சையில் ஏற்பட்ட மின்தடை 20 நிமிடங்களில் சரி செய்யப்பட்டது
சென்னை மின்தடைக்கு சேதமடைந்த கேபிள்கள் தான் காரணம். சாலை தோண்டும் பணிகளால் நிலத்தடி மின்கேபிள்கள் சேதமடைந்துள்ளது. உச்சபட்ச மின்தேவை 5,014 MW கடந்ததால் மின்மாற்றிகளுக்கு கூடுதல் சுமை. தொழிலாளர் பற்றாக்குறையால் பழுதுபார்ப்பு பணிகளில் தாமதம்
மவுண்ட் ரோடு, வேளச்சேரி, பெரம்பூரில் அதிக மின்தடை பதிவு. மின்தடை கண்காணிப்பு குழு ஆய்வுக்குழு கண்டுபிடிப்பு'' - மின்வாரியம்
