News
பிரபல மிஸ் கேரளா அழகி ஹர்ஷா சன்னி12 கோடி போதை பொருளுடன் விமான நிலயத்தி கைது
Published : Jun 13, 2026 09:36:16 AM - 2 months ago
ஜூன் சென்னை 13 நேற்று அதிகாலை பாங்காக்கில் இருந்து மும்பைக்கு விமானத்தில் ஹர்ஷா வந்தார் . பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது , ஹர்ஷா மீது சந்தேகம் ஏற்பட்டது. அப்போது ஹர்ஷாவின் பையில் ரூ.11.82 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா போதைபொருள் இருந்தது தெரியவந்தது. பறிமுதல் செய்த அதிகாரிகள், இதுபற்றி ஹர்ஷாவிடம் விசாரணை நடத்தினர். அவர் தனது பையில் எப்படி கஞ்சா வந்தது தெரியாது என்று கூறினார். இதையடுத்து ஹர்ஷாவை கைது செய்த அதிகாரிகள், அவரிடம் மேலும் விசாரித்து வருகின்றனர்.
மும்பையை சேர்ந்த பிரபல மாடல் அழகியான ஹர்ஷா சன்னி(29), தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஆண்டு நடந்த மிஸ் கேரளா அழகி போட்டியில் பங்கேற்று 2வது இடம் பிடித்தவர்.
