News
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 14ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலையில் மாற்றத்திற்கான வாய்ப்பு வானிலை மையம்
Published : Jun 12, 2026 05:39:27 PM - 5 months ago
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 14ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைந்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் வட உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
