பிரதமர் நரேந்திர மோடிதமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சந்திப்பு
Published : Jun 12, 2026 12:46:49 PM - 2 months ago
மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை (11.6.2026) புதுதில்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகை கலாச்சார மையத்தில், நித்தி ஆயோக்கின் 11-வது ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் நிறைவடைந்த பின்னர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சந்தித்துப்பு
தமிழகத்துக்கு நிலுவை நிதியை விரைந்து வழங்க கோரிக்கை
தேசிய கல்விக் கொள்கை அல்லது மும்மொழிக் கொள்கையை திணிக்காமல், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின்கீழ் நிலுவையில் உள்ள ரூ.3,284 கோடி நிதியை மத்திய அரசு உடனே விடுவிக்க வேண்டும். ‘வறுமையற்ற தமிழ்நாடு இயக்கம்’, ‘அனைவருக்கும் வீடு’ திட்டங்களுக்கு போதிய நிதியுதவி அளிக்க வேண்டும். பேரிடர்களை எதிர்கொள்ள காலநிலைத் தாங்குதன்மை பெருந்திட்டம்-2045, ஒகேனக்கல் 3-ம் கட்ட குடிநீர் திட்டத்துக்கான ரூ.2,283 கோடி நிதியுதவிக்கு மத்திய அரசு ஒப்புதல் தரவேண்டும்.
இலங்கை, பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள், அவர்களது படகுகளை விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குலசேகரபட்டினம் விண்வெளி மையத்தை ‘தேசிய விண்வெளி உற்பத்தி மையமாக’ அறிவிக்க வேண்டும். சென்னை - கன்னியாகுமரி அதிவேக ரயில் திட்டம், செங்கல்பட்டு - திருச்சி, திருச்சி – கரூர், கரூர் –கோவை, சென்னை மாதவரம் – சோழவரம் நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தினார்.
