News
திருத்தணி-சென்னை சென்ட்ரல் இடையே பிற்பகலில் இயங்கும் புகா் மின்சா ரயில் ஜூன் 12 -ஆம் தேதி வரை திருவாலங்காடு வரையே இயக்கப்படும்.
Published : Jun 11, 2026 11:05:07 AM - 2 months ago
இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அரக்கோணம் பணிமனையில் தண்டவாள மற்றும் தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் திங்கள்கிழமை தொடங்கி வரும் ஜூன் 12 -ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இதையடுத்து, அரக்கோணம் வழித்தடத்தில் 5 புகா் மின்சார இமு வகை ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், 40-க்கும் மேற்பட்ட இமு, மெமு வகை ரயில்கள் பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளன
