- தமிழ் சினிமாவை அரங்கத்திற்குள் இருந்து இயற்கை கிராம மண்வாசனையுடன் திறந்த வெளியில் காட்சி படுத்த புதிய பாதையை அறிமுகப்படுத்தினார் பாரதிராஜா இந்த திறமை இளம் இயக்குனர்கள் இடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. புரட்சிகர இயக்குநர் பாரதிராஜா வை இயக்குநர் இமயம் பாரதிராஜா என்று அழைக்கப் பட்டார்.
- இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு ‘சின்னசாமி’ என்ற இயற்பெயர் உள்ளது. பாரதிராஜா அவர்கள், 1941 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17 ஆம் நாள் பிறந்தார் தவழ்ந்தார் , இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், தேனி மாவட்டதிலுள்ள “அல்லி நகரம்” என்ற இடத்தில் ‘பெரிய மாயத்தேவர்’ என்பவருக்கும், ‘கருத்தம்மாவிற்கும்’ பிறந்த ஐந்தாவது பிரை நிலா பிள்ளை பாரதிராஜா. இவருக்கு மூன்று சகோதரிகள் மற்றும் மூன்று சகோதரர்கள், என ஆறு பேர் இவருடன் உடன் பிறந்தவர்கள் .
ஆரம்ப கல்வி மற்றும் ஆரம்ப வாழ்க்கை
பள்ளிப்படிப்பைத் தன்னுடைய சொந்த ஊரிலேயே முடித்தார்... பிறகு இலக்கியங்கள் படிப்பதில் அதிக ஆர்வம் காட்டியவர் ,, நாடகம் எழுதுவதிலும், நடிப்பதிலும், இயக்குவதிலும் தன்னுடைய கவனத்தினை செலுத்தினார் .
அவர் நாடக துறையில் . ‘ஊர் சிரிக்கிறது’, ‘சும்மா ஒரு கதை’ போன்ற கதைகளை எழுதி,திருவிழாக்காலங்களில் நாடக மேடைகளிலும் அரங்கேற்றியுள்ளார்.
பிறகு சுகாதார ஆய்வாளராக வேலை சேர்ந்தார் . ஊர் ஊராக சென்று மக்களிடம் நோய் பற்றி விசாரித்து தகவல் அளிக்கும் வேலையும் செய்தார்
அப்படி ஒரு முறை பண்ணைபுரம் சென்ற போது அங்கு இசை வாசிக்கும் இளையராஜா, கங்கை அமரன், பாஸ்கர் ஆகியோர் நண்பர்கள் ஆனார்கள். கம்யூனிஸ்ட் மேடைகளில் இசை வாசிக்க அண்ணன் பாவலர் வரதராஜனோடும் கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரய்யாவின் அண்ணன் மகன் 'அன்னக்கிளி' செல்வராஜ், இவர்களுடன் நட்பு கொண்டார்.,
பாரதிராஜா கடல்
திரை உலகை ஆள போகிறவர்கள் என்ற உண்மை தெரியாமல் சினிமாவில் வாய்ப்பு தேடி பாஸ்கர், இளையராஜா, கங்கை அமரன் மூவரும் புறப்பட்டு சென்னைக்கு வந்தார்கள். அப்போதுதிரைப்படங்களுக்கு இசையமைத்து வந்த இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷின் அறிமுகம் இளையராஜா.அவர்களுக்கு கிடைத்தது
பிறகு புட்டண்ணா கனகலிடம் 'இருளும் ஒளியும்' படத்தில் உதவி இயக்குநராக பணி புரிந்த பாரதிராஜா, அடுத்து கே.ஆர்.ஜி. தயாரிப்பில் கிருஷ்ணன் நாயர் இயக்கிய 'தலைபிரசவம்' படத்தில் உதவி இயக்குராக பணிபுரிந்தார். அடுத்து கே.ஆர்.ஜி. தயாரிப்பில் ஏ.ஜெகநாதன் இயக்கிய 'அதிர்ஷ்டம் அழைக்கிறது' படத்தில் உதவி இயக்குநராக பணி புரிந்தார்.
படங்களில் பாரதிராஜாவின் திறமையை அறிந்த கே.ஆர்.ஜி. அவருக்கு படம் இயக்கும் வாய்ப்பை வழங்கினார். சொந்த வீடு என்ற படம் முத்துராமன் கதாநாயகன், ஜெயலலிதா கதாநாயகி, வி.குமார் இசையமைப்பாளர் வாய்ப்பு வரும் நிலையில் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே ஜெயலலிதா படத்தில் இருந்து விலகி கொள்வதாக தெரிவித்தார் அதனால் அந்தப் படம் டிராப் ஆனது. அதன் பிறகு பாரதிராஜாவின் உச்சம் இமயம் வரை செல்ல கே.ஆர்.ஜி.யின் அலுவலகத்துக்கு பைனான்சியராக வந்த எஸ்.ஏ.ராஜ்கண்ணுவிடம் பேசிக் கொண்டிருந்த போது 'மயிலு' என்கிற கதையை பாரதிராஜா சொல்லி இருக்கிறார். அந்த கதை எஸ்.ஏ.ராஜ்கண்ணுவுக்கு பிடித்துவிட்டது. அதுதான் கமல், ரஜினி, ஸ்ரீதேவி நடிப்பில் பாரதிராஜா இயக்கிய '16 வயதினிலே'. அப்போது தேவராஜ் - மோகன் இயக்கத்தில் 'அன்னக்கிளி' படம் வெளியாகி பெரும் வெற்றிப் படமாக அமைந்தது இளையராஜா புகழ் பெற்றார். உடனே தனது நண்பர் இளையராஜாவை '16 வயதினிலே' படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்து படப்பிடிப்பை தொடங்கினார் .. பாரதிராஜா. 1977ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி வெளியான '16 வயதினிலே' படம் பெரும் வெற்றிப் படமாக அமைந்து, வசூலில் சாதனை படைத்தது இந்த படம் தமிழ் திரை உலகில் கொடிகட்டி மக்களை உற்சாகப்படுத்தியது
முதல் படத்திலேயே சிறந்த இயக்குநருக்கான தமிழக அரசின் விருது பெற்றார்.
பின்னர் பாரதிராஜா இயக்கிய 'கிழக்கே போகும் ரயில்', 'சிவப்பு ரோஜாக்கள்' என முத்திரை பதிக்கும் படங்களை இயக்கினார்.தனது உதவியாளர் கே.பாக்யராஜ் நடிப்பில், தனது தயாரிப்பில் 'புதிய வார்ப்புகள்' படத்தை இயக்கிய பாரதிராஜா, இன்னொரு உதவியாளரான கே.விஜயன், சுதாகர், ராதிகா நடிப்பில் 'நிறம் மாறாத பூக்கள்' படத்தை இயக்கினார்.
பாரதிராஜா வே கதாநாயகனாக நடிக்க முன்வந்தார் அவர் நடித்த முதல் திரைப்படம் 'கல்லுக்குள் ஈரம்' அவரே கதாநாயகனாக அறிமுகமானார்.
திரை உலகில் 16 வயதினிலே திரை படத்தில் முத்திரை பதித்த பாரதிராஜா மேலும் சில திரைப்படங்களை இயக்க முன்வந்தார்
தனது உதவியாளர் மணிவண்ணன் சொன்ன கதையில் 'புது முகங்களை அறிமுகப்படுத்த நடிகர் முத்துரான் மகன் கார்த்திக் மற்றும் அம்பிகாவின் தங்கை ராதா தியாகராஜன் வில்லனாகவும் வைத்து அலைகள் ஓய்வதில்லை' என்கிற படத்தை இயக்கினார் தனது நண்பனும், இளையராஜாவின் சகோதரருமான பாஸ்கர் தயாரிப்பில் வெளிவந்தது
மேலும், டிக்டிக்டிக், காதல் ஓவியம், வாலிபமே வாவா, மண்வாசனை, புதுமைப்பெண், ஒரு கைதியின் டைரி, முதல் மரியாதை, கடலோர கவிதைகள், வேதம் புதிது, கொடி பறக்குது, என்னுயிர் தோழன், புது நெல்லு புது நாத்து, நாடோடி தென்றல், கேப்டன் மகள், போற திரை படங்களை இயக்கினார்
கிழக்கு சீமையிலே, கருத்தம்மா,
ஆகிய திரைப்படம் தமிழக உலகில் தமிழ் மக்களை மிகவும் கவர்ந்தது பசும்பொன், தமிழ்செல்வன், அந்தி மந்தாரை, தாஜ்மகால், கடல் பூக்கள், ஈரநிலம், கண்களால் கைது செய், பொம்மலாட்டம், அன்னக்கொடி, மீண்டும் ஒரு மரியாதை ஆகிய தமிழ் படங்களையும், கொடுத்தார் .. சீதாகொகா சிலுகா, யுவதாரம் புலிச்சின்டி, ஈதரம் இல்லலு, ஜமடகனி, ஆராதனா ஆகிய தெலுங்கு படங்களையும், சொல்வ சவான், லவவர்ஸ், சாவேரே வலி காடி ஆகிய இந்திப் படங்கள் என சுமார் 44 படங்களை இயக்கியுள்ளார்.
இயக்கம் மட்டும் அல்லாமல் நடிகனாக திரையில் வலம் வந்தார் மக்கள் மனதிலும் நீங்கா இடம் பிடித்தார்
கல்லுக்குள் ஈரம் படத்தில் நடிகராக அறிமுகமான பாரதிராஜா, அதன் பிறகு நிழல்கள், தாவணி கனவுகள், இதயம், தந்துவிட்டேன் என்னை, காதல் வைரஸ், ஆயுத எழுத்து, ரெட்டை சுழி, பாண்டியநாடு, நினைத்தது யாரோ, குரங்கு பொம்மை, படை வீரன், சீதக்காதி, கென்னடி கிளப், நம்ம வீட்டுப் பிள்ளை, மீண்டும் ஒரு மரியாதை, ஈஸ்வரன், ராக்கி, மாநாடு, திருச்சிற்றம்பலம் ஆகிய இருபது படங்களில் நடித்திருக்கிறார்
மேலும் பாரதிராஜாவுக்கு பல புது முகங்களை அறிமுப்படுத்தியவர் என்ற பெருமையும் அவருக்கு உள்ளது
கே.பாக்யராஜ், ராதிகா, மணிவண்ணன், நெப்போலியன், நிழல்கள் ரவி, அருணா, விஜயசாந்தி, உஷா, கவுண்டமணி, கார்த்திக், ராதா, தியாகராஜன், ரேவதி உள்ளிட்ட பலரை திரையுலகில் அறிமுகம் செய்தவர்,
பாரதிராஜாவின் விருது
* 1977-ல் ‘16 வயதினிலே’, 1979-ல் ‘புதிய வார்ப்புகள்’,
- 1978 – ‘கிழக்கே போகும் ரயில்’ திரைப்படத்திற்காக ‘ஃபிலிம்பேர்’ விருது.
- 1981 – ‘சீதாகொகா சிலுகா’ திரைப்படத்திற்காக ஆந்திரபிரதேச அரசிடம் இருந்து “நந்தி விருது”.
- 1981-ல் ‘அலைகள் ஓய்வதில்லை’,
- 1986-ல் ‘முதல் மரியாதை’,
- 1988-ல் ‘வேதம் புதிது
- 2003-ல் ‘ஈர நிலம்’ போன்ற திரைப்படங்களுக்காக “தமிழக அரசின் மாநில விருது”.
- 2004 – இந்திய அரசால் “பத்மஸ்ரீ” விருது.
- 1995-ல் ‘கருத்தம்மா’, 1996-ல் ‘அந்தி மந்தாரை’, 2001-ல் ‘கடல் பூக்கள்’ போன்ற திரைப்படங்களுக்காக “தேசிய விருதை” வென்றுள்ளார்.
- தமிழக அரசின் “கலைமாமணி” விருது
மேலும்
சந்திர லீலாவதி’ என்பவரைத் திருமணம் செய்துகொண்டார் பாரதிராஜா அவர்களுக்கு, ‘மனோஜ்’ என்றொரு மகனும், ‘ஜனனி’ என்றொரு மகளும் பிறந்தனர்
பாரதிராஜாவின் வம்சத்திலும் வம்ச வழியிலும் தன மகனை ஒரு நடிகனாக திரைக்கு அறிமுக படுத்த ஆசை பட்டார் அப்படி வந்த இமயத்தின் புதல்வன் மனோஜ் யை வைத்து இயக்கி தயாரித்து ‘தாஜ்மஹால்’ படத்தில் கதாநாயகனாக அறிமுகப படுத்தினார் மிக பெரிய அளவில் தாஜ்மஹால் திரைப்படம் பிரபலமாக பேசப்பட்டது
‘அல்லி அர்ஜுனா’ படத்தையும் மகனுக்காக தயாரித்தார்.
மேலும் மேலும் என்று இவரின் இமயம் வரை சொல்ல முடியாமல் அளவுக்கு எல்லை இல்லாமல் கடந்து செல்கிறது பாரதிராஜாவின் படைப்பு, சின்ன திரை உலகிலும் பல தொடர்கள் வெளிவந்துள்ளது.. அதிலும் சின்ன திரை தொடர்கள் திரைப்படம் போல காட்சி படுத்தி இயக்கி இருப்பார்
.இவரின் சினிமா பங்களிப்புக்கு முன் கிராமத்து மணலில் புரண்டு ஓடைகளில் கம்மாய் கழனி யில் தத்தளித்து வானம் பார்த்த பூமி , உழவு விவசாயம்
வயல் மற்றும் வெள்ளாமை என்று பெயர் கொண்ட பூமி யில் பிறந்த பாரதிராஜா இம்மண்ணையும் திரை கடலையும் விட்டு மங்காத பெயர் கொண்டு விண்ணையும் மண்ணை யும் சேர்கும் கரையும் காற்றாய் தன மூச்சை அதற்குள் கலந்து விட்டார் இயக்குனர் இமயம் பாரதிராஜா
