இன்று 27 பேர் கைது. 1 கிலோவுக்கு மேல் கஞ்சா 981 குட்கா மற்றும் கூல் லிப் பறிமுதல்
Published : Jun 10, 2026 02:13:34 PM - 2 months ago
இன்று ஒரே நாளில் 27 பேர் கைது. 1 கிலோவுக்கு மேல் கஞ்சா 981 குட்கா மற்றும் கூல் லிப் பாக்கெட்டுகள் பறிமுதல்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள்,5 துணை காவல் கண்காணிப்பாளர்கள் 23 ஆய்வாளர்கள் 39 உதவி ஆய்வாளர்கள்502 போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர்
ஆபரேஷன் ஷீல்ட் நடவடிக்கையின் கீழ் ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 26 வழக்குகள் பதியப்பட்டுள்ளன அதில் புகையிலை தடுப்புச் சட்டமான COTPA Act இன் கீழ் 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் 981 குட்கா மற்றும் கூல் லிப் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன
மேலும் தேவி கோடு பகுதியை சேர்ந்த கோபி குமார் என்பவரின் மகன் ஷிஜு மற்றும் மாலைக்கோடு நடுவத்துக்காலை பகுதியை சேர்ந்த சேவியர் என்பவரின் மகன் ஜஸ்டின் ராஜ் ஆகியோர் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் அவர்களிடமிருந்து சுமார் 1 கிலோ 50 கிராம் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது
வழக்கு பதிவு செய்யப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்
