News
இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி!
Published : Jun 10, 2026 01:43:04 PM - 2 months ago
திரைப்பட இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினர். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
திரைமொழியில் தனிமொழி பேசி தனிச் சகாப்தத்தையே உருவாக்கியவர் பாரதிராஜா: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
தமிழ்த்திரையுலகுக்கு பேரிழப்பாகிவிட்ட பெருங்கலைஞனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திரைமொழியில் தனிமொழி பேசி தனிச் சகாப்தத்தையே உருவாக்கியவர் பாரதிராஜா. ஸ்டூடியோக்களுக்குள் அடைபட்டிருந்த கேமராக்கள் பாரதிராஜாவால் கிராமங்களுக்குள் நுழைந்தன என தெரிவித்தார்.
