News
இந்தியா பிரதமர் மோடி ஜூன் 13 முதல் ஒரு வாரம் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம்
Published : Jun 10, 2026 01:05:13 PM - 2 months ago
பிரதமர் மோடி ஜூன் 13 முதல் ஒரு வாரம் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அப்போது பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியாவுக்கு செல்லும் பிரதமர் மோடி ஜி7 உச்சிமாநாட்டிலும் பங்கேற்க உள்ளார். முதல் கட்டமாக, மோடி ஜூன் 13 முதல் 14 வரை பிரான்ஸின் நீஸ் நகருக்குச் செல்வார்.
ஜூன் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் பிரான்ஸின் எவியன் நகரில் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்பார். ஜூன் 16 முதல் 19 வரை எவியன் மற்றும் பாரிஸ் நகரங்களுக்கும் அவர் பயணம் மேற்கொள்வார். இதற்கு இடைப்பட்ட ஜூன் 14 முதல் 16 வரை ஸ்லோவாக்கியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார். ஜூன் 14 அன்று நீஸ் நகரில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்து பேச உள்ளார்.
