5 மணி நேரம் மின் தடை - ஆவடியில் பியூஸ் கேரியர்கள் திருடிய 2 பேர் கைது*
சென்னை ஆவடியில் புதைவட மின்சார கேபிள் பெட்டியில் 14 பியூஸ் கேரியர்களை திருடிய இருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பியூஸ் கேரியர்களை திருடியதால் ஆவடி பகுதியில் 5 மணி நேரத்திற்கு மேலாக மின்தடை ஏற்பட்டது. மேலும் சென்னை ஓட்டேரி இல் விடியற் காலை ஒரு சில மணி நேரம் மின் தடை ஏற்பட்டது
