யூடியூபர் மாரிதாஸ் கைது மதுரை : கட்சித் தலைவர்கள் கண்டனம்
Published : Jun 09, 2026 07:57:45 AM - 5 months ago
தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக, குறைச்சாட்டு பிரபல யூடியூபர் மாரிதாஸை சென்னை சைபர் க்ரைம் போலீஸார் மதுரையில் கைது செய்தனர்
பிரபல யூ டியூப்பர் மாரிதாஸ். இவர், அவ்வப்போது அரசியல் தொடர்பான கருத்துகளை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த திமுக ஆட்சியில் அரசுக்கு எதிராக சில பதிவுகளை வெளியிட்டது தொடர்பாக போலீஸார் அவரை கைது செய்தனர். தற்போது, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விஜய் தலைமையிலான அரசு நடைபெற்று வருகிறது.இந்நிலையில், அரசு மற்றும் அமைச்சர்களின் செயல்கள் குறித்து விமர்சித்து வீடியோ வெளியிட்டார். சமீபத்தில் கூடதனது யூடியூப்பக்கத்தில் தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா குறித்து விமர்சித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, அமைச்சரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் மட்டும் அல்லாமல் இழிவாகவும், ஆபாசமாகவும் கருத்து பதிவிட்டதாக மாரிதாஸ் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
. பின்னர் உள்ளூர் போலீஸார் உதவியுடன் மாரிதாஸை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். தொடர்ந்து அவரை சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
