டாஸ்மாக் : உற்பத்தி பெட்டிக்கு 90 ரூபாய் நிர்ணயம் மதுபானம் விலை. உயராது
Published : Jun 09, 2026 07:39:15 AM - 5 months ago
டாஸ்மாக் : உற்பத்தி பெட்டிக்கு 90 ரூபாய் நிர்ணயம் மதுபானம் விலை. உயராது இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் ; உற்பத்தியாளர்கள் வழங்கும் மது வகைகளுக்கு 58 சதவீதம் கலால் வரியும், 220 சத வீதம் மதிப்புக் கூட்டு வரியும் மாநில அரசுக்கு செலுத்துகின்றனர்.
இதனால் அரசுக்கு
கூடுதலாக ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். ஒவ்வொரு பெட்டிக்கும் ரூ.40 முதல் 80 வரை உற்பத்தியாளர்களிடம் கட்சிக்காரர் கள் பெற்று வந்தனர்.
இதைத் தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாடு இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுபானம் உற்பத்தியாளர்கள் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, விஸ்கி, பிராந்தி, வோட்கா போன்ற மது வகைகள் 9 ஒரு லிட்டர் பாட்டில்கள், 12 ஃபுல் (750 மில்லி) பாட்டில்கள், 24 ஆஃப் (375 மில்லி) பாட்டில்கள், 48 குவாட்டர் (180 மில்லி) பாட்டில்கள் அடங்கிய பெட்டிகளுக்கு தலா ரூ.90 கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.இதே போல பீர் வகைகளில் 650 மில்லி அளவுள்ள 12 பாட்டில்கள் கொண்ட பெட்டிக்கு ரூ.40-ம், 750 மில்லி அளவுள்ள 12 ஒயின் பாட்டில்கள் கொண்ட பெட்டிக்கு ரூ.20-ம் கூடுதல் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனால் மதுபானம் விலை உயராது:இந்த கட்டண நிர்ணயம் உற்பத்தியாளர்களுக்கு உரிமம் வழங்கும் போதே இணைக்கப்படும். மேலும் இந்த கூடுதல் கட்டணம் காரணமாக மதுபானங்களின் விற்பனை விலை உயராது என அதிகாரிகள் தெரிவித்தனர்
