News
திருச்சி கிழக்கு, மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பை தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Published : Jun 08, 2026 11:08:38 AM - 5 months ago
2026-ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளது. இதனை தொடர்ந்து த.வெ.க. தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தேர்தல் விதிப்படி, திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார்.
மேலும், அ.தி.மு.க. சார்பாக மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பை தொகுதிகளில் நின்று வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்தார். இதனால் திருச்சி கிழக்கு, மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பை தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
