News
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலை இல்லாத ஆண் சடலம்: . குற்றவாளிகளை பிடிக்க 8 தனிப்படைகள் அமைப்பு
Published : Jun 07, 2026 02:20:04 PM - 2 months ago
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸ் ஒன்றில் தலையில்லாத உடல் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, போலீஸார் சூட்கேஸில் கிடந்த உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக, பெரம்பூர் ரயில்வே போலீஸார் 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளன
பின்னர், ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் இது குறித்து, ஓட்டேரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்ததன் பேரில், ஓட்டேரி போலீஸார் மற்றும் உதவி ஆணையர் ரமேஷ் பாபு தலைமையிலான காவலர்கள் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், புளியந்தோப்பு துணை ஆணையர் முத்துக் குமார் தலைமையில் 6 தனிப்படைகளும், ரயில்வே போலீஸார் தலைமையில் 2 தனிப் படைகள் உட்பட 8 தனிப் படைகளை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தனிப் படை போலீஸார் தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போன ஆண் தொடர்பான புகார்களை வைத்தும், பெரம்பூர் ரயில் நிலையத்தில் மற்ற மாநிலங்களிலும் இருந்தும் ரயில்கள் வரும் என்பதால், அண்டை மாநிலங்களிலும் காணாமல் போனவர்களின் பட்டியலை கொண்டும் அதில் யாராவது கொல்லப்பட்டுள்ளனரா என்று கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
