News
சுற்றுலா செல்பவர்கள் பிளாஸ்டிக் பாட்டில்களையும் தூக்கி வீசுவதால் வன உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது உயர் நீதிமன்றம்
Published : Jun 06, 2026 10:21:06 PM - 2 months ago
மலைப் பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்பவர்கள் ஆங்காங்கே பிளாஸ்டிக் பாட்டில்களையும் மது பாட்டில்களையும் தூக்கி வீசுவதால் வன உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது
இதை தடுக்கும் விதமாக மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்பனை செய்து காலி பாட்டில்களை திரும்ப தரும் பட்சத்தில் 10 ரூபாயை திருப்பி தரும் வகையிலான திட்டத்தை அமல்படுத்தும்படி சுற்றுச்சூழல் மற்றும் வன விலங்குகள் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதிகள் சதீஷ்குமார் பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு உத்தரவிட்டிருந்தது
