News
இந்திய கிரிக்கெட் அணியில் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு
Published : Jun 06, 2026 04:29:32 PM - 2 months ago
ஆசிய விளையாட்டு போட்டி வரும் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை ஜப்பானில் உள்ள ஐச்சி - நகோயா நகரில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் கிரிக்கெட் போட்டியில் இந்தியா பங்கேற்கிறது. இந்திய கிரிக்கெட் அணியில் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது டி20 ஃபார்மெட்டில் இந்த கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது.
இந்தத் தொடருக்கான உத்தேச இந்திய கிரிக்கெட் அணி விவரம் கடந்த மாதம் வெளியானது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்த அந்தப் பட்டியலில் மொத்தம் 30 வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். அதில் வைபவ் சூர்யவன்ஷியும் இடம்பெற்றிருந்தார்
