ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டம்
Published : Jun 06, 2026 03:54:29 PM - 5 months ago
டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை தேர்வு முறைகளில் குளறுபடி உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் தொடங்கப்பட்டது.
நண்பர்களே, இது ஒரு நீண்ட போராட்டமாகும். மேலும் சம்பந்தப்பட்டவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், எங்கள் கணக்குகளை முடக்குவது (hacking) மற்றும் எங்கள் பதிவுகளை நீக்கச் செய்வது போன்ற கவனத்தைத் திசை திருப்பும் செயல்களிலேயே ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் நமது பதிவுகளை வேண்டுமானால் நீக்கலாம். ஆனால், இந்தப் பொதுவெளியில் இருந்து எங்களை அவர்களால் துடைத்தெறிய முடியாது" என்றார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இந்தியாவில் வேலையில்லாத இளைஞர்களை கரப்பான் பூச்சிகளுடன் ஒப்பிட்டுப் பேசியதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தொடங்கப்பட்ட ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ தற்போது சமூகம் சார்ந்த பிரச்சினைகளை கையில் எடுத்துள்ளது. அமெரிக்காவில் உள்ள அபிஜித் தீப்கே என்பவர் இந்தக் கட்சியை தொடங்கினார்.
இளைஞர்கள் மத்தியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே பேசியது: “தோழர்களே, இது மிக நீண்ட போராட்டம் ஆகும். அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென சமூக வலைதள மூலம் நாம் வலியுறுத்தி வருகிறோம்.
. அதேநேரத்தில் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நாடாளுமன்ற பாதுகாப்பு படையினர் மற்றும் காவல் துறையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
