News
சட்டவிரோதமாக கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்-அமைச்சர் விஜய்
Published : Jun 04, 2026 06:14:54 PM - 2 months ago
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (4.6.2026) தலைமைச் செயலகத்தில், இயற்கை வளங்கள் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.கனிமவளங்களை நீடித்த வளர்ச்சிக்குப் பயன்படுத்தும் வகையில் முறையாக எடுத்துப் பயன்படுத்துவதற்கும் கனிமவள வருவாயை மேம்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்
இக்கூட்டத்தில், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் திரு.என். ஆனந்த், மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டிகே. பிரபு,மற்றும் , தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. எ. சரவணவேல்ராஜ், இ.ஆ.ப., அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
