News
மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி, 21 டிஜிட்டல் திறன் பலகைகளை மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்
Published : Jun 04, 2026 02:02:51 PM - 2 months ago
ஜுன் 04 கோடை விடுமுறைக்கு பிரகு தமிழகத்தில் இன்று முதல் நாள் பள்ளிகள் திறக்கப்பட்டன. மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் இன்று சென்னை அரும்பாக்கம் சிஎம்டிஏ குடியிருப்பு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2026-2027 கல்வியாண்டின் தொடக்கமாக மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி, 21 டிஜிட்டல் திறன் பலகைகளை மாணவர் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மரு. சந்தர மோகன். B, இ.ஆ.ப., மாதிரிப் பள்ளிகள் உறுப்பினர் செயலர் திரு.இரா.சுதன், இ.ஆ.ப. (ஓய்வு), பள்ளிக்கல்வி இயக்குநர் முனைவர் ச.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநர் முனைவர் பூ.ஆ.நரேஷ் மற்றும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
