செந்தில் பாலாஜி இருந்த காலத்தில் தான் டிரான்ஸ்பார்மர் ஊழல் நடந்தது - அமைச்சர் நிர்மல்குமார்
Published : Jun 04, 2026 01:42:55 PM - 2 months ago
மின் துறை சார்ந்த ஹார்டு டிஸ்குகள் திருடு போனது இந்த விவகாரத்தில் யாரும் தப்பிக்க முடியாது என மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “மின்துறை தலைமை அலுவலகத்தின் முக்கியமான துறைகளில் இருந்த ஹார்டு டிஸ்குகள் அதில் கடந்த 5 ஆண்டு கால ஒப்பந்தங்கள் குறித்த ஆவணங்கள் திருடப்பட்டுள்ளன.
ஒப்பந்த தொழிலாளர்களின் நியமனம் தொடர்பான ஆவணங்களையும் காணவில்லை. எத்தனை ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்டுள்ள என்பது குறித்த கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது.
செந்தில் பாலாஜி இருந்த காலத்தில் தான் டிரான்ஸ்பார்மர் ஊழல் நடந்தது. டிரான்ஸ்பார்மர் ஊழல் குறித்து விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தொடர்புடைய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.தற்போது எதையும் தெரிவிக்க முடியாது பழைய டிரான்ஸ்பார்மர்களை மாற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை. மின்தடையை சரிசெய்ய கால அவகாசம் தேவை என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்
