Sports
உலகின் முன்னணி வீரர்கள் 6 பேர் பங்கேற்கும் 14வது நார்வே செஸ் தொடர்
Published : Jun 04, 2026 08:54:24 AM - 2 days ago
உலகின் முன்னணி வீரர்கள் 6 பேர் பங்கேற்கும் 14வது நார்வே செஸ் தொடர் ஆஸ்லோ நகரில் நடந்து வருகிறது. இந்த போட்டி மொத்தம் 10 சுற்றுகள் கொண்டது. இதில் உள்ளூர் நாயகனும், நம்பர் 1 வீரருமான நார்வேயின்மேக்னல் கார்லசனை இந்தியாவின் இளம் நட்சத்திரம் பிரக்ஞானந்தா (20) 3வது சுற்றில் வீழ்த்திருந்தார். இந்நிலையில், நேற்று நடந்த 8வது சுற்றில் கிளாசிக்கல் பிரிவில் மீண்டும் கார்ல்சனை வீழ்த்தி பிரக்ஞானந்தா வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தார். இதன்மூலம் ஒரே தொடரில் கார்ல்சனை 2 முறை தோற்கடித்த 2வது இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்*
