News
குன்னூரில் இருந்து ஊட்டி வரை டீசல் இன்ஜின் மூலமும் மலை ரயில் இயக்கப்படுகிறது
Published : Oct 16, 2026 11:03:41 AM - 2 weeks ago
நீலகிரி மலை ரயில் முதன்முறையாக கடந்த 1898-ம் ஆண்டு மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை இயக்கப்பட்டது. அதன் பின்னர் 1908-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி முதல் ஊட்டி வரை நீட்டிக்கப்பட்டது.
நூற்றாண்டை கடந்த மலை ரயிலுக்கு கடந்த 2005-ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு பாரம்பரிய அந்தஸ்து வழங்கியது. மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை நீராவி இன்ஜின் மூலமும், குன்னூரில் இருந்து ஊட்டி வரை டீசல் இன்ஜின் மூலமும் மலை ரயில் இயக்கப்படுகிறது. இதில் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பயணம் செய்து வருகின்றனர்.
