News
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ்,முத்துக்குமார்,பி.டி.அரசகுமார், மீது வழக்கு
Published : Oct 16, 2026 11:01:38 AM - 2 weeks ago
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி.அரசகுமார் சங்க மாநில பொருளாளர் முத்துக்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. போலீஸார் பதிலளிக்க உத்தரவு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
போலீஸார் தரப்பில் பதில் அளிக்க அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி இந்த மனுவுக்கு போலீஸார் தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்
