*சென்னையின் நீர் இருப்பு 33.74% ஆக சரிவு*
சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் மற்றும் கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் நீர் இருப்பு 33.74 சதவீதமாகச் சரிந்துள்ளது.
இந்த 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டி.எம்.சி-யில் இன்றைய நிலவரப்படி 3.967 டி.எம்.சி நீர் மட்டுமே இருப்பில் உள்ளது.
