News
தன் இயலாமையை மறைக்க ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35க்கு வாங்க தவெக அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது: டி.டி.வி.தினகரன்
Published : Oct 13, 2026 11:22:30 AM - 2 weeks ago
*தன் இயலாமையை மறைக்க ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35க்கு வாங்க தவெக அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது: டி.டி.வி.தினகரன்*
ரூ.35க்கு ஒரு யூனிட் மின்சாரத்தை வெளிச்சந்தையில் வாங்க தவெக அரசு போட்டுள்ள இந்த ஒப்பந்தம், ‘மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்' என்ற பழமொழியை நினைவுபடுத்துகிறது. தன் இயலாமையை மறைக்க பார்க்காமல், மின் தட்டுப்பாட்டைப் போக்கவும், தடையற்ற மின்சாரத்தை விநியோகம் செய்திடவும் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டும் என்று அமமுக பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
