News
பங்குச்சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் லாபம்
Published : Oct 13, 2026 11:21:19 AM - 3 weeks ago
*பங்குச்சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் லாபம்!*
இந்திய பங்குச்சந்தைகள் நேற்று கடும் வீழ்ச்சியடைந்த நிலையில் இன்று (அக். 13, செவ்வாய்க்கிழமை) உயர்வுடன் வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 71,951.73 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 10.15 மணியளவில் சென்செக்ஸ் 633.64 புள்ளிகள் உயர்ந்து 72,566.73 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 197.40 புள்ளிகள் உயர்ந்து 22,560.75 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
