*ஜந்தர் மந்தரில் இனி போராட அனுமதி இல்லை*
டெல்லியில் இதுவரை போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்த ஜந்தர் மந்தர் பகுதி, போராட்டம் நடத்த அனுமதிக்கப்படும் இடங்களின் பட்டியலிலிருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகக் குழுவின் பரிந்துரையின்படி, இனி ராம் லீலா மைதானம், புராரி மைதானம் மற்றும் கிழக்கு டெல்லி சிபிடி மைதானம் ஆகிய 3 குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே போராட்டங்கள் நடத்த அனுமதிக்கப்படும் என்று டெல்லி காவல்துறை அறிவித்துள்ளது
