News
அரிசி, பருப்பு விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிப்பு: அன்புமணி ராமதாஸ் கண்டனம்
Published : Oct 12, 2026 03:14:05 PM - 3 weeks ago
*அரிசி, பருப்பு விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிப்பு: அன்புமணி ராமதாஸ் கண்டனம்*
அரிசி, பருப்பு விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அலட்சியம் காட்டாமல் அரசு உடனடியாக நடவடிகை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
*தலைமைச் செயலகம் வரை மின்வெட்டு பாதிப்பு: தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி*
அன்புமணி ராமதாஸ் தன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
தமிழக அரசு தலைமைச் செயலகத்தின் முதல் தளத்தில் இன்று காலை ஏற்பட்ட மின் தடை காரணமாக அமைச்சர்கள் அலுவலக அறைகள் இருளில் மூழ்கின. இது தொடர்பான காணொலிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. தமிழ்நாடு முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள மின்வெட்டு தமிழக அரசின் அதிகார பீடமான தலைமைச் செயலகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது கவலையளிக்கிறது.
தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டு கடந்த ஒரு மாதத்திற்கும் நீடித்து வருகிறது. மின்வெட்டால் பாதிக்கப்படாத பகுதிகளே இல்லை எனும் அளவுக்கு தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் ஏற்பட்ட மின் தடை இப்போது தலைமை செயலகம் வரை சென்றிருப்பது நிலைமை மோசமடைந்திருப்பதையே காட்டுகிறது. இந்த நிலைமை உடனடியாக சரி செய்யப்பட வேண்டும்.
என்று தெரிவித்துள்ளார்.
