வைகோ தலைமையில் வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
Published : Oct 10, 2026 01:17:36 PM - 3 weeks ago
சென்னை எழும்பூரில், தமிழீழ விடுதலைப் போராட்டத்திலும் இலங்கையின் உள்நாட்டுப் போரிலும் உயிர்நீத்த தியாகிகளுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
*நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பேசிய வைகோ*
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருப்பது விஜய் தலைமையிலான அரசுக்கு மக்கள் அளித்த அங்கீகாரம். பணநாயகத்தை வீழ்த்தி ஜனநாயகம் வென்றுள்ளது.
இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி சார்பில் பணம் கொடுக்கப்படவில்லை.
மற்ற கட்சிகள் பணம் கொடுத்தும் தோல்வியடைந்து இருக்கிறார்கள்.
தமிழக வெற்றி கழகம் ஆட்சியில் ஊழியலில் இல்லை என்று உறுதியாக இருப்பது தான் இந்த வெற்றி ஆகும்
திமுக மற்றும் அதிமுக தலைவர்கள் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தும் வெற்றி பெற முடியவில்லை என்று விமர்சித்த வைகோ, விஜய் மீது முன்வைக்கப்பட்ட கடுமையான விமர்சனங்களையும் மக்கள் புறந்தள்ளியுள்ளதாகத் தெரிவித்தார். தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுகளுக்கு இடமில்லை என்பதை இந்த வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாகவும், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் பெற்ற வெற்றி ஆட்சிக்குக் கிடைத்த அங்கீகாரம் என்றும் குறிப்பிட்டார்.
தமிழக வெற்றிக் கழக அடுத்து வரும் தேர்தலிலும் வெற்றி பெறும்.
SIR அதிகாரம் முடக்கம் வகையில் பாஜக மத்திய அரசு செயல்படுகிறது.
எந்த காலகட்டத்திலும் தமிழ் நாட்டில் பாஜக வெற்றி பெற மாட்டார்கள்.
நாளை மோடி சென்னை வருகிறார், அவர் வரட்டும் வந்துட்டு போகட்டும்.
நரேந்திர மோடியுடன், மதிமுக கட்சி எந்த காலத்திலும் ஒட்டும் உருவும் இருக்காது என குறிப்பிட்டார்
